விவாகரத்து குறித்து பத்தாவது நாளே முடிவு செய்தது ஏன்? ரம்யா பரபரப்பு பதில்

294

சின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா, சமீபத்தில் தன் தன் கணவரை விவாகரத்து செய்தார். இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்தார்.

ஆனால், இவர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தது தான், மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் விவாகரத்து வரை சென்றதாக கூறப்பட்டது.

தற்போது ரம்யா இதையெல்லாம் மறுத்து உள்ளார். இவர் கூறுகையில் ‘நான் இந்த துறைக்கு 19 வயதில் வந்தேன், எனக்கு 28 வயது ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

என் பெற்றோர்கள் தடுக்கவே நானும் மறுத்து விட்டேன், மணி சார் படம் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். பலரும் இப்படத்தில் நடித்ததால் தான், என் கணவருக்கு பிடிக்கவில்லை, அப்படி..இப்படி என்று கூறுகின்றனர்.

திருமணம் ஆகி 10வது நாளே எனக்கு தெரிந்து விட்டது, என் வாழ்க்கை இது இல்லை என்று, அப்போது இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டோம்.

ஓ காதல் கண்மணி படம் திருமணம் முடிந்து 7 மாதங்களுக்கு பின் தான் நடித்தேன், இது பெற்றோர்கள் நிச்சயத்த திருமணம், ஒருவேளை காதல் திருமணமாக இருந்திருந்தால், இந்த பிரச்சனைகள் வந்திருக்காது’ என கூறியுள்ளார்.

SHARE