விவேகம் படத்துடன் மோதுகிறேன், ஆனால் நானே முதல் ஷோ விவேகம் தான் பார்ப்பேன்- பிரபல தயாரிப்பாளர்

267

ஆகஸ்ட் 10-ம் தேதி எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் விவேகம் படம் அன்று தான் ரிலிஸ் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விவேகம் படத்துடன் தரமணி படமும் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை சதீஷ் தயாரித்துள்ளார்.

இவர் இதுக்குறித்து பேசுகையில் ’விவேகத்துடன் எங்கள் படம் வருகின்றது, ஆனால், எல்லோரும் விவேகம் படத்தை பார்க்க தான் முதலுரிமை கொடுப்பார்கள்.

நானும் விவேகம் படத்தை பார்க்க தான் விரும்புகிறேன், அதனால், தான் தரமணியை ஒருநாள் கழித்து ரிலிஸ் செய்கிறேன்.

தரமணி ஒரு தரமான படம் கண்டிப்பாக அதற்கான ஆடியன்ஸ் கண்டிப்பாக வருவார்கள்’ என கூறியுள்ளார்.

SHARE