விஷால் படத்துக்கு தடை வருகிறதா ?

186

சுசீந்தரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பாயம் புலி. இப்படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது .

payum_puli001

இந்நிலையில் பாயம் புலி படத்துக்கு தடை போட விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.ஏன் இந்த தடை என்று விசாரித்த போது ” வேந்தர் மூவிஸ் நிறுவனமும், ஈராஸ் நிறுவனமும் இணைந்துதான் லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டது.

அதில் திரையரங்க உரிமையாளர்கள் பலருக்கும் மிகுந்த நஷ்டம். இவ்விரு நிறுவனங்களும் வெளியிடும் எந்த படத்தையும் வாங்காமல் நிறுத்தினால், நம்ம பணம் தானா வந்துவிடும் என்று சமீபத்தில் நடந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.

ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விஷாலின் பாயும் புலிக்கு ரெட் அடிப்பது தொடர்பாக பேசப்பட்டதால் தான் இந்த தடை விவகாரம் வெளியவந்துள்ளது .

SHARE