வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைத்துள்ளார். இந்த இல்லத்தை தாம் பயன்படுத்தப் போவதில்லை என பிரேமதாச அறிவித்துள்ளார்.

349

 

வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைத்துள்ளார்.

இந்த இல்லத்தை தாம் பயன்படுத்தப் போவதில்லை என பிரேமதாச அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் விமலசிறி டி சில்வா இன்று காலை இல்லத்தின் சாவிகளை அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.

சாவியை பெற்றுக்கொண்ட அமைச்சர் அந்த தருணத்திலேயே, பொதுநிர்வாக அமைச்சு அதிகாரிகளிடம் இல்லத்தின் சாவியை ஒப்படைத்துள்ளார்.

இல்லத்தை பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட இருபது லட்ச ரூபாவினையும் அமைச்சர் ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட இல்லத்தை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

குறித்த இல்லத்தில் வாகனங்களிலிருந்து அகற்றப்பட்ட இலக்கத் தகடுகள் சிலவற்றையும் அமைச்சர் மீட்டு எடுத்துள்ளார்.

SHARE