வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதி அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பொறுப்புகளை செத்சிரிபாயாவில் உள்ள தனது அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வர்த்தக வாணிப அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாத் பதியுதீன், கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் பிரதி அமைச்சர் ஹுஸைன் பைலா, ஓட்டமாவடி பிரதேசசபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச பொது மக்கள் என பலரும் கரலந்து கொண்டனர்.
இதன்போது பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதவழிபாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.thuruvamnews.com/2015/01/1_353.html#sthash.lMSH5bjF.dpuf