கொழும்பு துறைமுகத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
துறைமுக ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலே குறிப்பிட்ட ஆர்பாட்டம் முன்னேடுக்கபடுவதகவும்,
துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு முறைப்படி ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை அதிகரிக்கப்பட வேண்டும்.
புதிய அரசில் துறைமுகம் தொடர்பான அமைச்சிற்கு அர்ஜுன ரணதுங்க பொறுபேற்று உள்ள நிலையில் இம்மாதம் 22 ஆம் திகதி புதிய அதிரிக்கபட்ட சம்பளம் வழங்கபட வேண்டியுள்ளது.
இருந்து மார்ச் மாதமே சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளதால் இந்த ஆர்பாட்டம் முன்னேடுக்கப்ட்டுள்ளது.
துறைமுகத்தின் வெளியில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டம் அலறி மாளிகையின் பின்பக்கத்தை சுற்று வளைத்து நடாத்தப் படுகிறது.
புதிய அரசு பதவி ஏற்ற பின் நடைபெறும் முதலாவது அரச சார்பு ஊழியர்களின் ஆர்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சற்றுமுன் (இலங்கை நேரம் மாலை 6:20) கிடைத்த தகவல்களின் படி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திய யூனியன் தலைவர்கள் குழுவுக்கு பெப்ரவரி மாதத்தில் இருந்து சம்பள அதிகரிப்பும் அரியர்ஸ் உம் வழங்குவதாக உறுதி செய்யபட்டதை தொடர்ந்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது என தெரிய வருகிறது.