வீதி இன்றி தவிக்கும் கருங்காலித் தாழ்வு கிராம மக்கள் வைத்திய கலாநிதி சி. சிவமோகனிடம் மக்கள் முறைப்பாடு

349

 

மன்னார் மாவட்டத்தில் ஆண்டான்குள பிரதேசத்தில் வயல் வெளிகளின் நடுவே உள்ள ஒரு கிராமமே கருங்காலித் தாழ்வு கிராமம் ஆகும். இங்கு 34 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் தற்சமயம் 13 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் மூலம் வீடு கட்டவும் அனுமதி வந்துள்ளது.
unnamed (17) unnamed (18) unnamed (19) unnamed (20)
இருப்பினும் பாதை சீரின்மையால் வீடு கட்டுவதற்குரிய கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்கு குறித்த 13 குடும்பங்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மேற்படி கிராமத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர், வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்கள் அக்கிராமத்திற் நேரடியாக சென்று பார்வையிட்ட பொழுது அக் கிராம மக்கள் தாங்கள் பலகாலங்களாய் எமது சொந்த காணிகளுக்கு பாதை இல்லாததால் செல்லவில்லை எனவும் தமக்கான வீட்டுத் திட்டம் வந்திருந்தபோதும் பாதை ஒன்று இல்லாததால் தமது வீட்டுத் திட்டம் கூட ரத்து செய்யப்பட்டு விடுமோ என ஐயம் தெரிவித்தனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில் தனக்குரிய வருடாந்த நிதியில் இப் பாதை புனரமைப்பு வேலையை தற்காலிகமாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் நிரந்தரமாக திருத்த வடமாகண சபையிÇடாக  தெரியப்படுத்தி முயற்சி எடுப்பதாகவும்; தெரிவித்தார்.
SHARE