வீரன் யார்? மகா வீரன் யார்?

871

vp

வீரன் யார் மகா வீரன் யார்?
mahinda_rajapaksaஇலங்கையின் ஆயுதப்போரட்ட வரலாற்றில் பிரபாகரன் மகிந்தராஜபக்ஷ இருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் மகிந்தராஜபக்ஷ அரசியலுக்கு வந்த பொழுது பிரபாகரன் ஆயுதப்போரட்டத்துக்குள் உள் நுழைந்தரோ தெரியாது ஆனால் பிரபாகரன் சிறு வயதில் இருந்தே தன்னை ஆயுதப்போரட்டத்திற்குள் இணைத்துக் கொண்டார். 1954ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி வல்வெட்டித்துறையில் பிரபல்யமான குடும்பத்தில் பிறந்த இவர் பாடசாலை பருவத்தை இடைநடுவில் முடித்துவிட்டு ஒரு ஆயுதப் போரட்டத்தை ஆரம்பித்தார். அதுதான் தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அமைப்பு
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொடக்கம் சந்திரிக்கா பண்டாரநாயக்க வரை ஆட்சியிலிருந்த காலத்தில் மட்டுமல்லாது மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்துடனும் மிக கடுமையான போரட்டத்தை வழி நடாத்தி சென்றார். ஒரு ஆயுதப்போரட்ட வரலாற்றில் தரைப்படை,கடற்படை,வான்படை என்ற SRI LANKA-POLITICS-CHOGMமுப்படைகளுடனும் உலக வரலாற்றில் பிரபாகரன் தடம் பதித்தார்
இவருடைய போரட்ட வீயுகங்களை கண்டு உலக நாடுகள் வியப்படைந்தன ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடனான திம்பு பேச்சுவார்த்தைகளிலும் ராஜீவ்காந்தி உடனான ஒப்பந்தங்களிலும் தோல்வி கண்டபோது ஆயுதப்போரட்டமே தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும் என போரட்டப்பயணத்தை தொடர்ந்தார். இக்காலகட்டத்தில் இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நிரந்தரமான பகையை உருவாக்கும் நோக்கில் அப்போதைய ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முயற்சிகளை மேற்கொண்டார்
இந்தியாவுடனான முறுகல் நிலை அக்காலத்தில் கணிசமாக காணப்பட்ட போதும் அடுத்து ஆட்சிக்கு வந்த ரணசிங்க பிரேமதாசா விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவுக்கும் நிரந்தர பகையை உருவாக்கும் வகையில் கடுமையாக செயற்பட்டு இன்று வெற்றியும் கண்டார் ஆனால் அந்த வெற்றியை கண்பதற்கு இன்று பிரேமதாசா உயிருடன் இல்லை இந்திய இராணுவம் இலங்கையில் கால் பதித்த காலப்பகுதியில் பிரேமதாசா பிரபாகரனுடன் நெருங்கிய உறவுடன் இருந்து வந்தார்.

அதன் உள் நோக்கம் வேறு விதமாக இருந்தது பிரபாகரன் ஏன் போரட்டத்திற்குள் நுழைந்தார் என்று பார்க்கும் போது தந்தையுடன் வெளி இடங்களுக்கு செல்லுகையில் சிங்கள காவல் துறையினர் அப்பாவி தமிழ் மக்களை அடித்து துன்புறுத்தும் நிகழ்வை கண்டதனால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவை ஆழமான வடுக்களை ஏற்படுத்தி விட்டது
அதிலும் பிரபாகரன் சிறுவனாக இருந்த போது 1958ம் ஆண்டு நடந்து முடிந்த முதலாவது தமிழ் இன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது இதனால் பிரபாகரன படிக்கும் சிறுவனாக இருந்த போதும் அவருடைய நண்பர்களுடன் இணைந்து கைக்குண்டுகளை தயாரிக்க பழகினார் ஒரு முறை பிரபாகரன அவர்கள் கைக்குண்டுகளை தயாரிக்குக் போது ஏதிர்பாராத விதமாக குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது prabakaran   இதனால் கரிகாலன் என்னும் புனைப் பெயரும் சிறுவயதில் அமைந்தது பிரபாகரன் தன்னை 16 வயதிலேயே போரட்டத்தில் இணைத்துக் கொண்டாடர்
ஆரம்ப கட்டத்தில் கெரில்லா போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முதலாவது தமிழீழப் போரை ஆவணி மாதம் 1984 ஆடி 1987 வரை இடம் நடாத்தினார் ஆடி 1983இல் இலங்கைத்தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்க ஏதிராக கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்தனர்

விடுதலைப்புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காக பெருகின இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளை புரட்சிகர மக்கள் இராணுவமாக கட்டி ஏழுப்பும் நோக்குடன் அரசியல் இராணுவ அமைப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கினார் இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி பாரிய கெரில்லா இராணுவ பயிற்சி திட்டங்களை வகுத்தார் இது தமிழீழ போரட்டத்தில் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் ஆடி 1983 இன அழிப்புடன் ஆரம்பமாகின்றது

இந்த காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று ஈடுகொத்து எல்லா எதிர்ப்புகளுக்கும் எதிராக தமிழீழ மக்களின் விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் இது இவ்வாறிருக்க வரலாற்று ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இந்திய அரசினால் அவதானிக்கப்பட்டு வந்தார்

 

1043953432makinda
1983ம் ஆண்டு இலங்கைத் தீவை தனது புகோள கேந்திர ஆதிக்கத்துக்குள் கொண்டு வர இந்திய அரசு முயற்சி செய்தது இக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமும் வழங்கியது இதன் போது தலைவர் வே.பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து .

 

விடலாம் அல்லது பிரபாகரனை அழித்தொழித்து விடலாம் என்று திட்டம் தீட்டியது இந்திய அரசு அன்று இந்தியாவின் தந்திரத்தை அறிந்து கொண்ட பிரபாகரன் இந்திய உளவுப்படைகளுக்கு தெரியாமலே இலங்கைக்கு ஆயுதங்களை கொண்டு வந்து சேர்த்தார் மாசி மாதம் 24ம் திகதி 1983ல் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகின தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழத்தில் ஆயுப்போரட்டம் தீவிரமடைந்தது அதன் பின் புதிய தமிழ் புலி இயக்கம் உருவெடுத்தது பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25பேருக்கு மேற்பட்டோர் இருந்தனர் இக்காலகட்டத்தில் அரசாங்கத்துக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அரச பேரூந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

 

Prabhakaran-chencholai
பிரபாகரன் அவர்கள் உட்பட நான்கு பேர் சென்றார்கள் ஆனால் மற்ற மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி விட்டனர் 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் துணிவுடன் சென்று அரசபேரூந்தை கொளுத்தி விட்டு திரும்பி வந்தார் பிரபாகரனின் இந்த துணிவும் ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தது அவரை விட மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவை பொறுப்பெடுத்த காரியத்தையும் பாரட்டினார்கதமிழ் தீவிரவாதத்தின் தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது புதிய புலிகளின் முதலாவது நடவடிக்கையாக 1975ஆம் ஆண்டு ஆடி27 ம் திகதி அன்று பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு அருகில் வைத்து அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் யாழ்ப்பாண மேயருமான அல்பிரட்துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டர் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்திய புதிய தமிழ்

புலிகள் மேயரின் கார்ச்சாரதியை மடக்கி அவரின் காரில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர் இவ் வெற்றிகரமான முதலாவது நடவடிக்கையை வகுத்த அதற்கு தலைமை தாங்கிச் தப்பிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும் தமிழீழ மக்களின் போரட்டத்தை காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது ஸ்ரீலங்கா அரசுக்கு சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் தம்தோழர்களுடன் புகுந்து ஜந்து இலட்சம் ரூபா நகையும் இரண்டு இலட்சம் பணமும் எடுத்துக்கொண்டு சென்றார் அல்பிரட்துரையப்பா கொல்லப்பட்டதும் புதூர் வங்கி கொள்ளைச்சம்பவம் ஆகிய இரு சம்பவங்களையும் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் ஒரு விசேட உளவுத்துறை அமைக்கப்பட்டது
இது இவ்வாறிருக்க தலைவர் பிரபாகரன் தமிழீழ விடுதலைப்போரில் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்தார் (1)ஸ்ரீலங்காபொலிஸ் உளவுப்படையை துரோகிகளை அழித்தல் (2)தமிழீழத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச்செய்தல் (3)இராணுவ முகாம்கள் மீது மறைந்தும் நேரடியாகவும் தாக்கி அழித்து தமிழ் மக்களுக்கேற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடக தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல் இவ் வேளையில் 1976 ஆடி 2ஆம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த நடராசர் என்ற பெற்றோல் நிலைய முகமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டார் 1977 மாசி 14இல் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் அதே ஆண்டில் வைகாசி 18 இல் சண்முகநாதன் உட்பட இரு காவற்துறையினரும் இணுவிலில் சுட்டுக்கொல்லப்பட்டனர் அவ் வருடமே ஜக்கியதேசியக்கட்சியினாலும் தமிழின அழிப்பு ஒன்று இலங்கைத்தீவு முழுவதும் நடத்திமுடிக்கப்பட்டது
1978தை 27இல் பொத்துவில் தொகுதியின் கூட்டணி வேட்பாளர் கொழும்பில் சுடப்பட்டர் இவ்வாண்டிலேயே சித்திரை 7இல் கொழும்பு 4ம் மாடி சித்திரை வதை முகாமில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்த்தியான் பிள்ளை உட்பட 4 ஸ்ரீலங்கா உளவுப்படைக் காவற்துறையிர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதோடு சித்திரை 25 இல் புதிய தமிழ் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கை வரை எல்லாமாகச் சேர்த்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்ட அதேசமயம் வைகாசி 19இல் விடுதலைப்புலிகளின் தடைச்சட்டம் ஸ்ரீலங்கா பாரளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது இச்சட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சகல விதமான அதிகாரங்களையும் வழங்கிய ஆதே ஆண்டே ஆவணி 27 இல் ஜக்கிய தேசியக்கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது இது ஒரு புறம் இருக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் 1978 மார்கழி 5ஆம் திகதி திருநெல்வேலியில் அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கியில் இருந்து ரூபா 12 இலட்சத்தினைப் பறித்ததுடன் 2 காவற்துறையினரையும் சுட்டுக்கொன்றனர்.

13-prabagaran-234x300
1979 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் செயற்பாடுகள் பல்வேறு கோணங்களில் அமையப்பெற்றாலும் அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வந்தார் பிரபாகரன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களை ஒரு தந்திரசாலி என்றே உலகம் போற்றியது அந்த தந்திரசாலிக்கும் ஒரு மந்திரம் காட்டி வந்தார் வேலுப்பிள்ளை பிரபாகரன்
பிரேமதாசா சந்திரிக்கா இவர்களுக்கு பின் வந்த மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாவார் 1945 நவம்பர் 18இல் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பிறந்தார் பிரபாகரன் அவர்களும் நவம்பர் 26இல் பிறந்தார் மகிந்தவை விட பிரபாகரன் 9 வருடங்கள் இளமையுள்ளவராகக் காணப்பட்டார் மகிந்தவின் சாதனைகளை குறிப்பாக சொல்லப்போனால் பிரபாகரனை விட
(தொடர்ச்சி அடுத்த வாரம்…………….;)
;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE