வெடிகுண்டு தாக்குதல் போல் சிக்ஸர்களை பறக்கவிடுவார்! இளம் வீரர் குறித்து வியந்து பேசிய மஹேல ஜெயவர்த்தனே

15

 

சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் குறித்து இலங்கை ஜாம்பவான் வீரர் மஹேல ஜெயவர்த்தனே வியந்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் லீக் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட், ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலிய அணி டிம் டேவிட்டை தங்கள் அணியில் விளையாட வைக்க உள்ளது. இந்த நிலையில் டிம் டேவிட் குறித்து இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே கூறுகையில்,

‘டிம் டேவிட் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாததால் அவர் இந்தத் தொடரில் சுதந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்படுவார் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் இது அவருக்கு ஒரு சிறந்த இடம் என்று நான் நினைக்கிறேன். அவுஸ்திரேலிய அணியில் மிகவும் சிறந்த துடுப்பாட்ட வரிசை உள்ளது.

ஒரு பெரிய ஹிட்டர் மற்றும் வெடிக்கக் கூடிய வகையிலான ஹிட்டர் அவுஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால், அவர்கள் டிம் டேவிட்டை ஆறாவது வரிசையில் பயன்படுத்தலாம்.

அந்த சமயம் ஒரு எக்ஸ் பாக்டர் வீரர் போன்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார். எனவே அத்தகைய வீரர் ஒருவரை கொண்டு வருவது தான் அவுஸ்திரேலிய அணிக்கு புத்திசாலித்தனம்’ என தெரிவித்துள்ளார்.

SHARE