வெடித்து சிதறிய வெடிகுண்டால் வேடிக்கை பார்த்த அப்பாவி மக்கள் 63 பேர் பலி

156
நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டு வெடித்ததில் 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக பல்வேறு நாசவேலைகளில் போகோஹரம் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள மான்குனோ நகரில், போகோஹரம் தீவிரவாதிகள் முகாமை அந்நாட்டு ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.

அந்த முகாம் வாசலில் கிடந்த ஒரு சாக்குமூட்டையை அப்புறப்படுத்த முயன்றபோது, அதிலிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன.

இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 63 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நைஜீரியாவின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ஹம்மது புஹாரி போகோஹரம் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளார்.

nijeria_bomb_003  nijeria_bomb_004

SHARE