வெனிசுலா அதிபருக்கு எதிராக போராட்டம்: இது வரை 43 பேர் பலி

487
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டக்குழுவில் இடம் பிடித்திருந்த மாணவன் குண்டு காயங்களுடன் பிணமாக காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

குற்றவியல் நடைமுறை சட்டம் கருத்துக்களக் குழுவின் தலைவரான அல்ப்ரெடோ ரோமெரோ கூறுகையில், ஜோசு பாரியஸ் என்பவர் மரகைபோ நகரின் மேற்கு பகுதியில் கடந்த மே 29ந் தேதியன்று அரசுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொண்டபோது குண்டு காயங்களுடன் விழுந்து கிடந்ததாக கூறியுள்ளார். அவர் அங்குள்ள ஜூலியா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறை பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்கள், பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகிய காரணங்களுக்காக அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 11ந் தேதி வெளியான தகவலின் படி அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 42 பேர் கொல்லப்பட்டதாகவும், 873 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE