வெப்ப வலய நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி : அமைச்சர் கெஹலிய!

38

 

வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் தற்போது மாறி வருகின்றது. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு தளத்திலும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பிரதான தலைப்புகளாகும்.

ஆனால் இன்றைய நிலவரப்படி சுற்றுச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் முன்னிலைக்கு வந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் குறித்து சரியான கவனம் செலுத்தப்படாமையாகும்.
மனிதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு கணக்கிட முடியாதது.

கைத்தொழில் புரட்சியின் போது சுற்றுச்சூழலில் சரியான கவனம் செலுத்தாததன் விளைவை இன்று அனுபவித்து வருகிறோம்.

2015 ஆண்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை.

அதனால் வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாடுகளால் வெப்ப வலய நாடுகள் பாரிய நட்டத்தை சந்தித்துள்ளன.

எனவே ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டையும் மிஞ்சிய பெறுமதி இம்முறை மாநாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதிப்பு எதிராக வலுவான சூழலை கட்டமைக்க வேண்டிய அவசியம் தோன்றியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE