வெளியேறிய கானா பாலா.. கால் மேல் கால் போட்டு அசிங்கப்படுத்திய விசித்ரா

88

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என குழப்பம் இருந்த நிலையில், கமல் கானா பாலா தான் எலிமினேஷன் என கார்டை காட்டி அறிவித்தார்.

அதை அறிவிக்கும் முன்பு விசித்ராவை பற்றி கானா பாலா ஒரு விஷயத்தை கூறி இருந்தார். “தயவு செய்து ரூல்ஸ் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்க” என விசித்ரா பற்றி கானா பாலா கமலிடம் கூறினார்.

அசிங்கப்படுத்திய விசித்ரா
அந்த சம்பவத்திற்கு பிறகு சிறிது நேரம் கழித்து கமல் எலிமினேஷன் கார்டை காட்டினார். அப்போது கானா பாலா மற்ற எல்லா போட்டியாளர்களிடமும் கைகொடுத்து விடைபெற்றுக்கொண்டார்.

விசித்ரா மட்டும் சோபாவில் இருந்து எழவே இல்லை. கானா பாலா வந்து கைகொடுக்கும் போது கால் மேல் கால் போட்டு விசித்ரா அமர்ந்து கொண்டு கைகொடுத்தார்.’நான் உங்களை பற்றி சொல்லல, பொதுவாக சொன்னேன்’ என கானா பாலா விளக்கம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

SHARE