வெளிவராத கத்தி படத்தின் தகவல்.

416

பாஸ்ட் லுக் வெளிவந்ததுலிருந்தே அப்படத்தின் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் படு சுவாரசியமாகி விட்டது. ஆனால் வரும் விஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என்று யோசிக்கும் போதே தற்போது இன்னொரு தகவலும் வெளிவந்து உள்ளது.

அதாவது சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வார இதழ் பேட்டியில் கத்தி படத்தை பற்றி சில பல விஷயங்களை உளறி கொட்டினர் அவற்றில் “கத்தி’ படத்தில் விஜய் சாருக்கு இரண்டு கேரக்டர்கள், ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம். ஆனா, இவங்க இரண்டு பேரும் அப்பா மகன் கிடையாது.” என விஜய்யின் கேரக்டர் பற்றி சூசகமாகக் கூறியுள்ளார்.

ஆனால் வெளியிடாத விஷயமும் ஒன்று உள்ளது. விஜய் ஏற்றிருக்கும் இரண்டு வேடங்களுக்கும் தோற்றத்தில் எந்த வித மாற்றுமும் கிடையாது. இரண்டு பேரும் ஒரே சாயலில் தான் இருப்பார்களாம். ஏன் இப்படி? இந்த தோற்ற ஒற்றுமையை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்வதுபோல் முருகதாஸ் காட்சி அமைத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

துப்பாக்கி பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் வெற்றி கூட்டணி மறுபடியும் இணைந்து இருப்பதால் மக்களிடைய பலத்த எதிர்பார்ப்பு இப்படத்துக்கு உள்ளது.

 

SHARE