வெள்ளைக்கொடியுடன் சென்ற வேளை படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள்

587

இதில் இசைப்பிரியா ஏனைய போராளிகளுடன் அமர்த்தப்பட்டிருப்பதையும் அவரின் மார்பை பிடித்திருப்பவர் தற்போது ஜேர்மனுக்கான சிறிலங்காவின் துணைத்தூதுவராகவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி கட்டளை தளபதியாக இருந்தவருமான ஜகத் டயஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை மேற்குலக நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதேவேளை வெள்ளைக்கொடியுடன் சென்ற வேளை படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதை சர்வேந்திர சில்வா, ஜயத் ஜயசூரிய, ஜகத் டயஸ் ஆகியோர் பார்வையிடும் படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

இசைப்பிரியா போராளிகளுடன் அமர்ந்திருக்கும் படத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக நிற்பவர் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் திருகோணமலை கட்டளை தளபதியுமான வசந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையுடன் இந்த படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.
isai_perijawhite flagvanni

SHARE