வேலணை மத்தி மாணவன் கராத்தே சுற்றுப் போட்டியில்  2 ஆம் இடம

173

பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதற்காக கல்வித்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும்  கராத்தே சுற்றுப்போட்டியில் 2015 ஆண்டுக்கான வடமாகாண போட்டிகள் வவுனியா சி.சி.ரி.என்.எஸ். பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது.

யாழ்மாவட்டம் சார்பாக வேலணை மத்திய கல்லூரி மாணவனும் கராத்தே பயிற்றுவிப்பாளர் “சென்சேய்” முருகானந்தனின் சீடனுமான முருகானந்தன் முரளி 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான “குமித்தே” கராத்தே போட்டியில் பங்குகொண்டு  2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

தீவக கல்வி  வலய மாணவன் ஒருவர் முதற்தடவையாக பதக்கம் ஒன்றை வட மாகாண போட்டியில் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE