வைத்திய கலாநிதி சிவமோகன் தலமையில் புதுக்குடியிருப்பில் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்! (Photos & Video)

605

 

 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, பொன்னம்பலம் சத்திரசிகிச்சை வைத்தியசாலை அமைந்திருந்த நாற்பதுக்கும் மேல்பட்ட தமிழ் மக்களுக்கு உரித்துடைய இருபது ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை, 2009ம் ஆண்டுக்குப்பின்னர் சிறீலங்கா இராணுவத்தின் 682வது படையணியினர் கையகப்படுத்தி தலைமையகம் அமைத்துள்ளனர்.

???????????????????????????????
இக்காணிகளுக்கு உரித்துடைய மக்கள், ‘தமது காணிகளை ஒப்படைக்குமாறும் – தமது வீடுகள் வளவுகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும்’ கடந்த ஆறு வருடங்களாக போராட்டங்களை நடத்தியும், பாராளுமன்ற – மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் சமுக அமைப்பினர் வலியுறுத்தியும், 682வது படையணியினர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்காது நிலைகொண்டிருந்தனர்.
???????????????????????????????
இந்நிலையில் காணி எடுத்தல் சட்டம் (அத்தியாயம் 460) 38(அ) ஆம் பிரிவின் கீழ் குறித்த இருபது ஏக்கர் காணியையும் நிரந்தரமாக 682வது படையணியினருக்கு கையளிக்க கிளிநொச்சி மாவட்டச்செயலக காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் எம்.எம்.திலகரட்ண எடுத்த முயற்சியை இன்று (17.03.2015) காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
???????????????????????????????
காணியை கையகப்படுத்தல் – கையேற்றல் படிவத்தை தயாரித்து, குறித்த காணிகளை உரிமை கோருவோரிடம் கையெழுத்துபெற்று, 682வது படையணியின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்க, இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வருகை தந்திருந்த காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் எம்.எம்.திலகரட்ணவை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி, பிரதானவாயில் கதவுகளை அடைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
???????????????????????????????
மக்கள் போராட்டத்தை கண்டு ஓட்டம் எடுத்து 682வது படையணியின் தலைமையகத்துக்குள் புகுந்துகொண்ட எம்.எம்.திலகரட்ண, அங்கிருந்துகொண்டு படையணியின் தலைமையகத்துக்கு வருமாறு பிரதேசசெயலாளர், கிராம அலுவலர் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். உசாரடைந்த மக்களில் ஒரு பகுதியினர் இவ்விரு அரச அதிகாரிகளையும் படையணியின் தலைமையகத்துக்கு செல்லவிடாமல் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்க,  மற்றுமொரு பகுதி மக்கள், படையணியின் தலைமையகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி உள்ளே ஒழிந்திருக்கும் எம்.எம்.திலகரட்ணவை வெளியே வருமாறு குரல் எழுப்பினர்.
???????????????????????????????
‘தமது காணிகளை இராணுவத்துக்கு கையளியாதே!, இராணுவமே எமது காணிகளை விட்டு வெளியேறு!, ஜனாதிபதி அவர்களே எமது காணிகளை அபகரிக்காதீர்கள்! எமது காணிகளை எம்மிடமே தந்துவிடுங்கள்!’ எனவும் மக்கள் கோசமிட்டனர்.
???????????????????????????????
பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு சென்று, தமக்கு உரித்துடைய காணிகளை தம்மிடம் மீளவும் தந்து விடுமாறு கோரிக்கை விடுக்கும் மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
???????????????????????????????
இப்போராட்டத்துக்கான ஒழுங்கமைப்புகளை வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் மேற்கொண்டிருந்தார். மக்களுடன் இணைந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் நவரட்ணம், செயலாளர் திருமதி சந்திரலீலா சிமித்கட்சன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் அமிர்தலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
SHARE