வோக்ஸ் அபார சதம்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

700
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.டொமினிக்காவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 148 ஓட்டங்களில் சுருண்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலியா 318 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 170 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 216 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சாமுவேல்ஸ் 74 ஓட்டங்களும், டவ்ரிச் 70 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா சார்பில், ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஜான்சன், ஹாசில்வுட், லயன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து 47 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 2 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11ம் திகதி கிங்ஸ்டனில் நடக்கிறது.

SHARE