ஷங்கர் மனைவி தான் ஹீரோயின்.. இயக்குனராக மாறிய முன்னணி நடிகர்

13

 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் நண்பன். இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

இன்று வரை விஜய்யின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படமாக நண்பன் உள்ளது. நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அந்த விழாவிற்கு விக்ரம், ஷங்கர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் வந்திருந்தனர்.

ஷங்கர் மனைவி தான் ஹீரோயின்
அப்போது மேடையில் அனைவரும் ஒன்றுகூடிய போது, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடிகர் விஜய்யிடம், நீங்க தான் நண்பன் படத்தின் இயக்குனர், உங்க ஹீரோ ரோலில் ஷங்கர் சார் நடிக்கிறார் என்றால், ஹீரோயின் ரோலில் யார் நடிப்பார் என்று கேட்டார்.

இதற்க்கு ‘ஹீரோயின் ஷங்கர் சாரோட மனைவி தான்’ என்று உடனடியாக பதில் கூறினார்.

அதுமட்டுமின்றி ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா ரோலில் யார்யார் நடித்திருப்பார்கள் என்று கேட்டார். இதற்க்கு ‘ ஒரு நண்பர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றொரு நண்பர் கே.வி. ஆனந்த்’ என்று கூறியுள்ளார் விஜய்.

SHARE