ஸ்டீவ் சுமித் அபார சதம்: அவுஸ்திரேலியா ஆதிக்கம்

325
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்துள்ளது.அவுஸ்திரேலியா– மேற்கிந்திய அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரரான டெவிட் வார்னர் முதல் ஓவரிலே ‘டக்- அவுட்’ ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஷான் மார்ஷ் (11) நிலைக்கவில்லை.

அணித்தலைவர் கிளார்க், ஸ்டீவ் சுமித் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது. கிளார்க் (47) அரைசதத்தை தவறவிட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் சுமித் 5வது சதத்தை அடித்தார்.

ஆடம் வோக்ஸ் 37 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சுமித்– வாட்சன் ஜோடி பொறுமையாக விளையாடி வருகிறது. ஸ்டீவன் சுமித் 135 ஓட்டங்களுடனும், வாட்சன் 20 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

SHARE