சில தினங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகம் செய்தது.இதன்மூலம் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு போட்டியாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.
200 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரமானது 1.4 அங்குல அளவு மற்றும் 320 x 106 Pixel Resolution ஆகியவற்றினைக் கொண்ட திரையினைக் கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பினை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம், GPS தொழில்நுட்பம், Bluetooth 4.0 ஆகியவற்றுடன் iOS, Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. |