ஸ்ரீ திவ்யா முரண்டு பிடிக்கிறார்…..

183


ருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்த ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் சில லட்சங்களில் தொடங்கி பல லட்சங்களாக உயர்ந்துவிட்டதால், தன்னிடம் புதிதாக கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் ஹீரோ, இயக்குநர் யார் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் நடிக்க ஒப்புக்கொள்வதுடன் தனது சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே செல்கிறாராம். இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் காட்டுமல்லி, நகர்புறம் என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தனராம் அப்படங்களில் தயாரிப்பாளர்கள்.  திடீரென இவரது மார்க்கெட் உயர்ந்துவிட்டதால் இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களையும் இவர் கண்டுகொள்வதில்லையாம். அவ்விரு தயாரிப்பாளர்களும் இவரை அணுகி கால்ஷீட் கேட்டால் தன்னிடம் தற்போது கால்ஷீட் இல்லையென கூறுவதோடு, தனது தற்போதைய மார்க்கெட்டுக்கேற்ற சம்பளத்தை கேட்டு முரண்டு பிடிக்கிறாராம். இதனால் நொந்துபோனா தயாரிப்பாளர்கள் இருவரும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரீ திவ்யா மீது புகார் கொடுத்து பஞ்சாயத்து வைத்தால்தான் தங்களுக்கு தீர்வு கிடைக்குமென எண்ணிய அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளனராம். இது குறித்து  ஸ்ரீதிவ்யாவிடம் அவரது நலம்விரும்பிகள் எடுத்துக் கூறினால் அவர்களிடம், அவர்கள் என்ன என் மீது புகார் கொடுக்க நானே நடிகர் சங்கத்தில் அவர்கள் மீது புகார் தரப்போகிறேன் என்று கூறிவருகிறாராம்.

SHARE