ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என தான் கூறியதால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால், அதற்காக கவலையை தெரிவித்து கொள்வதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் பரதேசி எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ரவூப் ஹக்கீம் மற்றும் சந்திரிக்கா குமாரதுங்கவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை வெளியிட வேண்டும்.
விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை கொலை செய்யும் போது 2002ம் ஆண்டு ரவூப் ஹக்கீம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை.
அத்துடன் ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு சிங்களவர்களுக்கு எதிராக சர்வதேசத்திற்கு தகவல் வழங்கி வருகிறார் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.