{ஹனைஸ்பாறூகின் ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்

118

 

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கி மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட

முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி {ஹனைஸ்பாறூகின் வாகனம் மற்றும் அவரது ஆதரவாளர்கள

பயனித்த வாகனங்கள் மீது வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் வைத்து நேற்று 07-08-2015

இரவு றிஸாட் பதியுதீனின் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வவுனியா சாலம்பைக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற ஐக்கி மக்கள் சதந்திரக் கூட்டமைபின்

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியிலேயே இந்த அசம்பாவிதம்

இடம்பெற்றுள்ளது.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் றிஸாட் பதியுதீனை ஆதரித்து அமைத்துள்ள ஐக்கி

தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார காரியலயத்தில் இருந்த சுமார் 30ற்கும் மேற்பட்ட

குண்டர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இப்பகுதியில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலீஸார் இக்குண்டர்களை தடுத்த

போதும் அதையும்மீறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கற்கள் மற்றும் தடிகளை கொண்டே இத்தாக்குதலை இவர்கள் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14)

SHARE