ஹிஸ்புல்லாவுக்கும் அங்கஜனுக்கும் தேசியப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி- பிள்ளையான் ஒப்பாரி

156

 

hissuஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்தாலும் தேசியப்பட்டியலில் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என மட்டக்களப்பு தமிழ் மக்களை ஏமாற்றி திரிந்த பிள்ளையானுக்கு தேசிய பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை.

தனக்கு தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரிடம் பிள்ளையான் கெஞ்சிய போதிலும் பிள்ளையானின் கெஞ்சலை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை,

ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்வதற்கு பிள்ளையான் முயற்சி செய்த போதும் பிள்ளையானை சந்திக்கவோ தொலைபேசியல் உரையாடவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மறுத்துள்ளார்.   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மலித் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் மூன்று முஸ்லீம்களுக்கும் ஒரு தமிழருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டிலில் இடம்பெற்றிருந்த ஜே. ஸ்ரீரங்கா, ஜீ.எல். பீரிஸ், டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, திஸ்ஸ அத்தநாயக்க, ரொஜினோல்ட் குரே, ஜீவன் குமாரதுங்க, டிரான் அலஸ், பிரபா கணேசன், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பிரியசிறி விஜேநாயக்க, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.hissu

SHARE