ஹீரோன்னு சொல்லி காலி பண்ணிடாதீங்க – காமெடி நடிகர் சூரி நடுக்கம் 

361



விக்ரம் பிரபு நடிக்கும் ‘வெள்ளக்கார துரை’ பட விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சூரி பேசியதாவது:தமிழ் திரையுலகுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சிவாஜி பரம்பரையிலிருந்து வந்தவர் விக்ரம் பிரபு. ஆனாலும் என்னிடம் வந்து இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி நீங்கள் சொல்லித் தரவேண்டும் என்றார். இந்த பணிவுதான் அந்த குடும்பத்தை உயர்த்தி பிடிக்கிறது. என்னைப் பார்த்து ஹீரோவாக நடிக்கப்போகிறீர்களா என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி இங்கு கேட்டார். ஹீரோ என்று சொல்லி இந்த மேடையை எனக்கு கடைசி மேடை ஆக்கிவிடாதீர்கள். இப்படத்தில் நடித்த அனைவரையும் எழில் எந்தவித டென்ஷனும் இல் லாமல் வேலை வாங்கினார். கிறிஸ் துமஸ் தினத்தில் படம் வெளியாகிறது. டி. இமான் இசை அமைத்திருக்கிறார். விழாவில் பட தயாரிப்பாளர் அன்புச் செழியன் வரவேற்று பேசினார். எஸ்.தாணு, விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்

 

SHARE