ஜிகர்தண்டா திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக வந்து சிரிப்புமூட்டியவர் நடிகர் பாபி சிம்ஹா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிறகு வில்லனாக நடித்த பாபி சிம்ஹா தற்போது ஹீரோவாகிவிட்டார். இயக்குனர் பெருமாள் சாமி இயக்கத்தில் ரேஷ்மி மேனனுடன் ஜோடி போட்டு பாபி சிம்ஹா நடிக்கும் திரைப்படம் உறுமீன். உறுமீன் திரைப்படம் சிம்ஹாவுக்கு மட்டும் ஒரு திருப்புமுனையாக இல்லாமல், ’மெட்ராஸ்’ பட புகழ் கலையரசனுக்கும் ஒரு திருப்புனையாக அமையப்போகிறது. மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பால் கார்த்தி போன்ற ஸ்டார் வேல்யூ உள்ள நடிகருடன் நடித்தும் அதிகம் பாராட்டப்பட்டவர் கலையரசன். இப்போது உறுமீன் திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதால் பாபி சிம்ஹாவுக்கும், கலையரசனுக்கும் இடையே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதில் கடும் போட்டி நிலவப்போவது உறுதி.