ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: இத்தாலி நிறுவன முன்னாள் தலைமை அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்

366
ரூ.3,600 கோடி மதிப்பிலான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்தியா 2010 ஆம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட் லேண்ட்டிடம் இருந்து  ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், பின்மெக்கானிக்காவுடனும், அதன் துணை நிறுவனங்களுடனும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது

இந்த ஒப்பந்தம் தொடர்பாக  பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கிசெபி ஒர்சி மற்றும் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் முன்னாள் தலைவர் புருனோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது ஊழல் வழக்கு இத்தாலி பஸ்டோ அர்சிசோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த வருடம் முடிவடைந்தது. இன்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

பின்மெக்கானிக்கா முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிசெபி ஒர்சி மற்றும் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் முன்னாள் தலைவர் புருனோ ஸ்பாக்னோலினி  ஆகியோருக்கு போலியான விலைபட்டியலை கொடுத்ததற்காக நீதி மன்றத்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

SHARE