ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 சவுதி விமானிகள் உயிரிழப்பு

170
சவுதி அரேபியாவில், ஏமன் எல்லை அருகே எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று, ஜிஸான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். பலியானவர்கள் அலி பின் முகமது அல் கார்னி, நாசர் பின் முகமது அல் ஹார்தி என சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன. நாட்டின் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது நினைவு கூரத்தக்கது

SHARE