அகதிகளின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்து

254

சர்வதேச நியமங்களின் அடிப்படையில் குடிபெயர்வாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவை வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மீளாய்வு அமர்வின்போதே இந்த வலியுறுத்தலை இலங்கை குழு விடுத்துள்ளது.

அகதிகள், குடிபெயர்வாளர்கள் மற்றும் அவர்கள் மத்தியில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் நலன்சார் விடயங்களையும் இலங்கை ஊக்குவிப்பதாகவும் இலங்கைக்குழு தெரிவித்துள்ளது.

asteliy_sril

SHARE