அகதிகளின் கூடாரங்களை அடித்து நொறுக்கிய கிரேக்க விவசாயி

302
அத்துமீறி கூடாரங்கள் அமைத்திருந்த சிரியா அகதிகளின் கூடாரங்களை கிரேக்க விவசாயி ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரேக்க விவசாயி ஒருவர் தமது நிலத்தில் அத்துமீறி கூடாரம் அமைத்திருந்த சிரியா அகதிகளின் கூடாரங்களை தனது டிராக்டர் கொண்டு இடித்து தள்ளியுள்ளார்.

தனது மாடுகளை அந்த நிலத்தில் கட்டுவதற்கு தோதாக அந்த நிலத்தை தயார் படுத்த வேண்டும், அதனாலே அகதிகளின் கூடாரங்களை அகற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு 70-80 கன்றுக்குட்டிகள் இருப்பதாகவும் அவைகளுக்கு உணவு பயிர வேண்டும், பொருளாதார ரீதியாக தாம் மிகவும் பிந்தங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட விவசாயி உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்ததாகவும், போட்டியை சமாளிக்க முடியாமல் அந்த விடுதியை மூடியுள்ளதாகவும் அங்கிருந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து கேள்வியுற்று வந்த பொலிசார், விவசாயியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஒரு பகுதி கூடாரங்கள் தப்பியுள்ளது.

SHARE