அகதிகளுக்கு கூடுதலாக புகலிடம் அளிக்கும் நாடுகள் எவை தெரியுமா?

206

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

சர்வதேச அளவில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளே அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி தெரிவித்துள்ளது.

உலகளவில் அகதிகளின் பிரச்சனைகளை பற்றி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பணக்கார நாடுகள் தான் அதிகளவில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

ஆனால், அகதிகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதற்கு இந்த பணக்கார நாடுகள் முன்வரவில்லை என்பது தான் ஒரு கசப்பான செய்தியாகும்.

உலகில் உள்ள அகதிகளில் 50 சதவிகிதத்தினர் 10 நாடுகளில் வசித்து வருகின்றனர். ஆனா, இவை பணக்கார நாடுகள் அல்ல.

இவைகள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசியாவில் அமைந்துள்ளன.

இந்த நாடுகளில் முதல் 5 நாடுகளும் அவை அனுமதித்துள்ள அகதிகளின் எண்ணிக்கையும் இதோ !
  1. ஜோர்டன் – 2.7 மில்லியன்
  2. துருக்கி – 2.5 மில்லியன்
  3. பாகிஸ்தான் – 1.6 மில்லியன்
  4. லெபனான் – 1.5 மில்லியன்
  5. ஈரான் – 9,79,000 அகதிகள்

இதுகுறித்து சர்வதேச அம்னாஸ்ட்டியை சேர்ந்த Salil Shetty என்பவர் பேசியபோது, ’உலகில் பணக்கார நாடுகள் என வலம் வரும் நாடுகள் அகதிகள் மீது எவ்வித கரிசணமும் காட்டவில்லை.

இவற்றில் பிரித்தானியா ஒரு மோசமான உதாரணமாகும். கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 8,000 அகதிகளை மட்டுமே எடுத்துள்ளது.

பணக்கார நாடுகளின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற காரணங்களால் தான் அகதிகளின் பிரச்சனைகள் மேலும் மோசம் அடைந்து வருகின்றன.

அகதிகளை பகிர்ந்துக்கொள்ளும் நடைமுறைகள் சிறப்பாக செய்யப்பட்டால், உலக அகதிகளின் பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கப்படும்’ என Salil Shetty தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE