அகதி வாழ்வுக்கு முடிவு இல்லையேல் தீக்குளிப்பேன்..!

299

 

முல்லைத்தீவு கோப்பாபுலவு குடியிருப்பில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து வருகிறது.
பகல் இரவாக நீடித்துவரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்குடியிருப்பு கிராமசேவகர் அலுவக நுழைவாயிலை மறித்து இன்று காலை முதல் முல்லைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், “கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நாங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். உறவுகளையும் இழந்து விட்டோம். இன்று நாங்கள் கேட்பது, எங்களின் சொந்த வீடு மற்றும் காணிகளையே. இது தான் எங்கள் இறுதிப் போராட்டம்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
SHARE