அகத்திக்கீரை உடலுக்கு தேவையான சத்துக்களையும், வைட்டமின்களையும் அதிக அளவில் கொண்டுள்ளது.
அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் உள்ளன.
மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, விட்டமின் ஏ போன்றவையும் உள்ளன.
அகத்தி கீரையின் நன்மைகள்
- அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும், அகத்திக் கீரையை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- படர் தாமரையை முழுமையாக குணமாடைய செய்ய சிறிதளவு அகத்தி கீரையின் சாற்றை பயன்படுத்த விரைவில் குணமடையும்.
- மூக்கின் மேற்பகுதிகளில் தோன்றும் அலற்சி, எரிச்சல், வலிகள், அடைப்பு போன்ற அனைத்துக்கும் இதன் ஒரு சொட்டு சாற்றை தடவி வருவதன் மூலம் விரைவில் சரியாகும்.
- ரத்த கசிவு ஏற்படும் இடங்களில் அகத்தி கீரையின் சாற்றை பிழிந்து இடுவதன் மூலம் ரத்தம் வருவது கட்டுக்குள் வைத்து விரைவில் ஆற செய்யும்.
- பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சுண்ணாம்பு சத்து அதிகமுள்ளது, இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்..
- நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து தடவினால் விரைவில் குணமாகும்.
- அகத்தி கீரையை பச்சையாக மென்று தினமும் சாப்பிட்டால் தொண்டைகளில் தோன்றும் தொண்டை புண் மற்றும் தொண்டை வலி ஆகிய பிரச்சனைகளை விரைவில் குணமடையும்.
- வாரத்திற்கு ஒருமுறை அகத்தி கீரையை உணவில் சேர்த்து உண்பதினால் உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இந்த பிரச்சனையிலிருந்து சீக்கிரமாக விடுபடலாம்.
குறிப்பு
- வாயு கோளாறு உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
- அதிக அளவில் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்தம் அசுத்தமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.
- மருந்து சாப்பிடுபவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் மருந்தின் வீரியத்தை இது குறைத்துவிடும்.