மன்னார் நகர் நிருபர்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று (9) திங்கள்கிழமை 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடமாற்றம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு அகழ்வு மேற்கொண்டபோது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரு அளவிற்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ள போதும் இன்று மேற்படி வளாகத்தின் முகப்பு பகுதியை மேலும் அகலப்படுத்தி ஆலப்படுத்தி மனித எச்சங்கள் காணப்படுகின்றனவா என ஆராய்ந்து பார்த்த சமயத்தில் மேலும் அதிகளவிலான சிதறிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன முகப்பு பகுதிகளில் தற்போது இன்னும் அதிகளவிலான மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தோகம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முகப்பு பகுதியை மேலும் ஆலப்படுத்தி ஆகழ்வு செய்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன குறித்த அகழ்வு பணிகளில் தற்போது மனிதவள பற்றாக்குறை காணப்படுவதனால் மீட்பு மற்றும் அப்புறப்படுத்தல் பணி மிகவும் மந்தகதியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலே சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.