அகில இலங்கை இந்து மஹா சபா ஒன்றுகூடல்

501
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்)  
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம் எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை இந்து மஹா சபையின் ஒன்று கூடல்  அட்டன் சீடாவள நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னர், வவுனியா, அனுராதபுரம், கண்டி, பதுளை, ரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்களிலிருந்து இந்து குருமார்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில்  இலங்கையில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தொடரும்  மதமாற்ற நடவடிக்கைகள், இந்துக்களை ஓரணியில் அணித்திரட்டல், அறநெறி கல்வியை விரிவுபடுத்தல், ஆலய மற்றும் மதம் சார் நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்தல், இந்து மத குருமார்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவும் அறிமுகமும் இடம்பெற்றது.மேலும் சிவனொளி பாத மலை அடிவாரத்தில்  இருந்த “சிவனடிபாதம்” என்ற பெயர் பலகை மாற்றப்பட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
SHARE