அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

288

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக அக்கட்சியின்;தேர்தல்ஆணையாளரால்அங்கீகரிக்கபட்டசெயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

12507559_198757057141618_7733136609338376626_n

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு புதிய செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன் உட்பட 14பேருக்குஎதிராகஇந்தமனுதாக்கல்செய்யப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் புதிய செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டமையானது சட்டவிரோதமானது எனவும் அது கட்சியின் யாப்புக்கு முரணானது என்பதால், பேராளர் மாநாட்டு முடிவுகளை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எம்.சுபைதீன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE