அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டு அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான ஒரு அணியாகவும் அக்கட்சியின் செயளாலரான YLS ஹமீட் தலைமையிலான இன்னுமொரு அணியாகவும் பிளவு பட்டுள்ளது.

312

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டு அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான ஒரு அணியாகவும் அக்கட்சியின் செயளாலரான YLS ஹமீட் தலைமையிலான இன்னுமொரு அணியாகவும் பிளவு பட்டுள்ளது.

resit

இரு அணியினரும் இன்று காலை தேர்தல் ஆணையாளரிடம் கட்சி யாருடையது யாருக்கு இக்கட்சி சொந்தம் என்ற தீர்ப்புக்காக பல்வேறு வாதப்பிரதி வாதங்களை முன்வைத்தனர்.
றிஸாட் பதியுதீன் தலைமையிலான அணியில் றிஸாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் இங்கு வருகை தந்திருந்தார்.

சட்டத்தரணி YLS ஹமீட் தலைமையிலான அணியில் YLS ஹமீட் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சருமான சுபைர் உற்பட இன்னும் சில முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கட்சியின் தலைவர் நான் எனக்கே சகல உரிமையும் அதிகாரமும் உண்டு. ஒருவரை கட்சியில் இணைத்துக் கொள்வது , கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவது போன்ற அதிகாரம் எனக்குரியது எனவே இக்கட்சி எனக்குத்தான் சொந்தம் என்று றிஸாட் பதியுதீன் தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்தார்.

இவரது கருத்தை செவிதாழ்த்திக் கேட்டுவிட்டு எழும்பிய சட்டத்தரணி YLS ஹமீட் இக்கட்சியின் யாப்பு தயாரித்தவனும் எழுதியவனும் நான். அத்துடன் கட்சியின் செயளாலரும் நானே. செயளாலரை எச்சந்தர்ப்பத்திலும் கட்சியில் இருந்து யாராலும் நீக்க முடியாது என்றும் கட்சியும் கட்சியின் முழு அதிகாரமும் செயளாலருக்கே உரித்தானது என்று கட்சியின் யாப்பில் இத்தனையாவது இடத்தில் இந்த தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினார்.

வாயடைத்து தலைகுணிந்து நின்ற றிஸாட் பதியுதீனைப் பார்த்து தேர்தல் ஆணையாளர் தேசபிரிய கட்சியாப்புப் பற்றி அறியாமலா இதுவரை காலமும் அக் கட்சியில் இருந்தீர்கள், நீங்கள் இருவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்தால் மாத்திரமே கட்சியில் நீங்கள் இருக்கலாம்.

அல்லது இருவரை விட்டும் கட்சி பரிபோய் தேர்தல் திணைக்களம் பாரமெடுக்கும் நிலை வரும் என்றார் எனவே இருவரும் பேசி ஒரு சுமுகமான தீர்வுக்கு வாருங்கள் என்று ஆலோசனை கூறினார் தேர்ல் ஆணையாளர்.

நீதிமன்றம் சென்றால் கட்சியாப்பின் படி இக்கட்சி YLS ஹமீடிற்குச் சொந்தமாகும். றிஸாட் பதியுதீன் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும் .

சட்டத்தரணி YLS ஹமீட் தலைமையிலான அணியில் உள்ள மேலும் பல உயர் அதிகாரிகள் அனைவரும் இணைந்து றிஸாட் பதியுதீன் செய்த பல்வேறு ஊழல்கள் தொடர்பில்மாபெரும் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

முசலி பிரதேச சபை முன்னால் தலைவர் எஹியான் பாயும் சட்டத்தரணி YLS ஹமீட் தலைமையிலான அணியில் உள்ளடங்குவதோடு மேலும் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இவர்களுக்கு ஆதரவு வழங்குன்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE