அக்குள்களில் இருக்கும் கருமையை நீக்க சூப்பர் டிப்ஸ்!

267

ஆண், பெண் ஆகிய இருபாலரும் அவர்களின் அக்குள், கழுத்து, தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் கருமைகளை மறைப்பதற்கு கண்ட கிரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் அவர்களில் பலரும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சரும அழற்சி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்த சரும பிரச்சனைகளை எளிமையான முறையில் போக்கி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உங்கள் வீட்டில் உள்ள அன்றாட பொருட்களைக் கொண்டு பயன்படுத்தி வந்தால் விரைவில் உங்கள் உறுப்புகளில் உள்ள கருமைகளைப் போக்கி பளிச்சிடும் சருமத்தை நீங்கள் பெறலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, ஆன்டி-பாக்டீரியல் தன்மையைக் கொண்டுள்ளது.

எனவே இந்த பேக்கிங் சோடாவில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இதனால் கருமையான சருமத்தை எளிதில் போக்குகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில், சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அக்குளில் தடவினால், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வியர்வை நாற்றம் வீசுவது நீங்குவதோடு, அக்குள்களில் இருக்கும் கருமையும் விரைவில் காணாமல் போய்விடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பழத்தை துண்டுகளாக நறுக்கி, அக்குளில் இருக்கும் கருமை நிறத்தின் மீது, தினமும் தேய்த்து வர வேண்டும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, அக்குள்களில் இருக்கும் கருமையை எளிதில் போக்கி விடுகிறது.

தக்காளி

பொதுவாக தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது.

எனவே இதனை தினமும் அக்குளில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவி வந்தால், அக்குள்களில் இருக்கும் கருமை விரைவில் மறைந்து விடுகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து, அதை பேஸ்ட் போல செய்து, அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இதே போல் தினமும் செய்து வந்தால், அக்குள்களில் இருக்கும் கருமையை விரைவில் போக்கிவிடுகிறது.

கடலை மாவு

கடலை மாவை மற்றும் அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இதனால், அக்குள்களில் இருக்கும் கருமை நீங்குவதோடு, அப்பகுதி மென்மையாகவும் இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அதை துண்டாக நறுக்கி, பின் அதை அரைத்து அக்குள்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

இதனால் கருமை ஏற்படுவதை முற்றிலும் தடுத்து விடுகிறது.

கற்றாழை ஜெல்

அக்குளில் வளரும் முடியை வேக்ஸ் செய்த பின், கற்றாழை ஜெல்லை தடவ வேண்டும்.

அக்குளில் உள்ள சருமம் மென்மையாகி, அக்குள்களில் ஏற்படும் கருமை நிறத்தினை எளிதில் போக்கி விடுகிறது.

கல் உப்பு

கல் உப்பை மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து, பின் அதனை அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

இதனால் அக்குள்களில் இருக்கும் கருமை விரைவில் மறைந்து விடுகிறது.

SHARE