அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் பேண்ட்

469
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் பேண்ட்

ஒன்பிளஸ் பேண்ட்
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் பிட்னஸ் பேண்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் மாடலில் 1.1 இன்ச் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 3 பிரத்யேக உடற்பயிற்சி மோட்கள், ஐபி 68 + 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ரியல்-டைம் இதய துடிப்பு டிராக்கிங் வசதி, எஸ்பிஒ2 சென்சார் மற்றும் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் 100 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
 ஒன்பிளஸ் பேண்ட்
ஒன்பிளஸ் பேண்ட் சிறப்பம்சங்கள்
– 1.1 இன்ச் 126×294 பிக்சல் AMOLED கலர் டச் ஸ்கிரீன்  டிஸ்ப்ளே
– நோட்டிபிகேஷன் வசதி
– மியூசிக் கண்ட்ரோல், கேமரா ஷட்டர் கண்ட்ரோல்
– இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங்
– ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
– உடற்பயிற்சி மோட்கள்
– 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப்
– ப்ளூடூத் 5
– ஐபி68+ 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 110 எம்ஏஹெச் பேட்டரி
ஒன்பிளஸ் பேண்ட் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒன்பிளஸ் பேண்ட் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
SHARE