
மேலும், மதவாச்சி பிரதேசத்தில் குறித்த பணமானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வரும் இதேவேளை, ஏனைய பிரதேசங்களிலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு குறித்த கொடுப்பனவானது குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுவதாக இந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் அகுனோச்சிய குமார காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவானது குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படாமையால் பணத்தை பெறச் செல்லும் நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மாதாந்த கொடுப்பனவை ஒரு வருடத்திற்கு போதுமானளவு வழங்கக் கோரி ஜனாதிபதியிடமும்,பிரதமரிடமும் கோரிக்கை விடுப்பதாக சிறுநீரக பாதுகாப்புச் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுநீரக நோயை நிரந்தரமாக குணப்படுத்தக் கூடிய மருந்து இன்மையால் இந்த நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய ERITHOPOETIN என்ற மருந்தை வாரத்திற்கு ஒரு தடவை வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்யுமாறு தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அநுராதபுரம் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் நொச்சியாகம,ஹொரவப்பத்தான,மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் உள்ள மருந்தகங்களில் குறித்த மருந்து தட்டுப்பாடாக இருப்பதாகவும்,இதற்காக 50-60 கிலோமீற்றர் தூரம் சென்று அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சென்று நோயாளர்கள் குறித்த மருந்தினை பெற்றுக் கொள்வதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.