அச்சுறுத்தும் சுறாக்களின் நடுவே ஒரு இரவை கழிக்க முடியுமா?

332
அயர்லாந்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று சுறாக்களுடன் ஒரு இரவை கழிக்கும் விசித்திர சவாலை பொதுமக்களிடம் விடுத்துள்ளது.அயர்லாந்த் நாட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனமானAirbnb மற்றும் Paris Aquarium இணைந்து இந்த வேறுபட்ட சவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சவாலில் தெரிவாகும் 3 துணிச்சல் மிகுந்த நபர்களை பாரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபல நீர்வாழ் காட்சியகத்தில் ஒரு இரவை கழிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த விசித்திர சவாலுக்கென பாரிஸ் நீர்வாழ் காட்சியகத்தில் சுறாக்களுக்கான பகுதியில் கண்ணாடியிலான விசேட அறை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களும் முழு உடற்தகுதியும் பெற்றவர்கள் மட்டுமே இந்த விசேட சாவலில் பங்குபெற முடியும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 11,12 அல்லது 13 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இந்த சவாலில் கலந்து கொள்பவர்கள், குறிபிடப்பட்ட 6 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் 550 எழுத்துக்களுக்கு மிகாமல் விளக்கம் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதில் இருந்து சிறந்த விளக்கமளிக்கும் நபர்களில் 3 பேரை இந்த சவாலுக்கென்று தெரிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

கண்ணாடியால் அமைந்துள்ள இந்த அறையில் வட்டவடிவிலான படுக்கை போடப்படும் எனவும், பங்கேற்கும் மூவருக்கும் 2 வேளை உணவு அந்த அறைக்குள் வழங்கப்படும் எனவும்,

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தும் பொருட்களையும் வழங்க உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேட படுக்கை அறையைச் சுற்றி 35 சுறாக்கள் வட்டமிடும் என்பதால் அந்த கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் 3 மில்லியன் லிற்றர் தண்ணீர் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் கண்டிப்பாக Jaws அல்லது Les Dents de la Mer போன்ற திரைப்படங்களை பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

SHARE