சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம்வேதாளம். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை தான் சிவா இயக்கப்போவதாக கூறப்படுகின்றது.
ஆனால், சிவா தமிழில் இயக்கிய முதல் படத்தின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படம் என ஒரு ஒப்பந்தம் போட்டுவிருந்தாராம். அஜித்தின் அடுத்தடுத்த படங்களால் முதலில் இதை கண்டுக்கொள்ளவில்லையாம்.
தற்போது அந்த நிறுவனம் சிவாவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டதாம், இந்த பிரச்சனையை அறிந்த சத்யஜோதி நிறுவனம் முதலில் அந்த பிரச்சனையை தீர்த்து விட்டு வாருங்கள் என்று கூறி விட்டதாம்.