துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அதிகம் ஆர்வம் காட்டி வருவது பைக் டூர் தான். கிடைக்கும் நேரங்களில் அவர் பைக் டூர் சென்றுவருகிறார்.
அதேசமயம் ரசிகர்கள் பைக் டூர் போல படத்திற்கும் அஜித் அக்கறை காட்ட வேண்டும் என ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் மகிழ்திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க விடாமுயற்சி என்ற படம் தயாராக இருந்தது.
படத்தின் அறிவிப்பு மட்டும் தான் வந்தது, ஆனால் அதற்கு மேல் எந்த ஒரு வேலையும் தொடங்கப்படவில்லை.
நடிகைகளின் விவரம்
இந்த படம் எப்படிபட்ட கதை என்பது சரியாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. இப்படத்தில் நாயகிகளாக நடிக்க த்ரிஷா மற்றும் சம்யுக்தா என இரண்டு பேரும் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.