நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்த பிறகு அடுத்து தடம், கலகத்தலைவன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்பட படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே இப்போது தொடங்கும், அப்போது தொடங்கும் என கூறப்பட்டது. அதேசமயம் அஜித் ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
மகிழ்திருமேனியிடம் முழுக்கதையும் கேட்டு அஜித் படப்படிப்பிற்கும் ஓகே செய்துவிட்டார். ஆக்ஷ்னுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் எமோஷ்னல் போர்ஷனும் உள்ளது என்கின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் ‘விடா முயற்சி’ அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்கிறார்கள். அதைத் தொடர்ந்து துபாய், அபுதாபி, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது, தொடர்ந்து 50 நாட்கள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.
பிரபல நடிகை
இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் நடிகை த்ரிஷா, ஆரவ், சஞ்சய் தத் போன்ற நடிகர்கள் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் பிரபல இளம் நடிகை ப்ரியா பவானி ஷங்கரும் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.