அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து வருபவர் விவேக் ஓபராய். இவர் அவ்வப்போது பல்கேரியாவில் நடக்கும் படப்பிடிப்பின் போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்வார்.
அந்த வகையில் அவர் சமீபத்தில், மேற்கு பல்கேரியாவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விவேகம் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், பனிகள் சூழ்ந்துள்ள இந்த பகுதியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது என டுவிட் செய்துள்ளார்.
குளிரில் இந்த நீச்சல் குளத்தில் குளிக்கும் தைரியம் யாருக்காவது உண்டா என கேட்டுள்ளார்