தமிழ் சினிமாவின் ஒரே தல அஜித் அவர்கள். இவருடன் பணிபுரிய வேண்டாம் என்று கூறும் கலைஞர்களே கிடையாது, அவர் படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் பிரபலங்கள் தான் உள்ளனர்.
சமீபத்தில் வெவ்வேறு பேட்டிகளில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பது விருப்பம் என்று தங்களது ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர் சீரியல் மற்றும் திரைப்பட நடிகர்கள்.
வருங்காலத்தில் அஜித், விஜய், சிம்பு, தனுஷ் இதில் யாருக்கு வில்லனாக நடிக்க ஆசை என நடிகர் அதர்வாவிடம் கேட்க அவர் அஜித் என்று கூறியுள்ளார்.
இன்னொரு பேட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரனிடம் தம்பி வேடம், வில்லன் இதில் எந்த கேரக்டரில் அஜித், விஜய்யுடன் நடிக்க ஆசை என கேட்க, அஜித்துடன் வில்லன் வேடம் விருப்பம் என தெரிவித்துள்ளார்.