பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனங்களில் ஊடுறியவர் சினேகன். இவர் தான் வெற்றியாளர் என்பது பலரின் கருத்து. ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல ஊடகங்களின் நேரலைகளில் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தன் கவித்துவ உணர்வுகளால் அனுபவங்களை பகரிந்துகொண்டார்.
2008 ம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் பாட்டெழுதினேன். அப்போது அஜித் யாரிடமும் அவ்வளவாக பேசாமல் அமைதியாக தான் இருப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான் ஹிரோக்களுக்கு பாட்டெழுதும் முன் அவர்களின் மேனரிசத்தை முழுமையாக கவனிப்பேன். அஜித் கீழே விழுந்து, முளைத்து எழுந்து மரமாய் நின்றவர். அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை.
பொது மக்களோடு கலப்பதில்லை என எல்லாருக்கும் தெரியும். அவரை மக்களிடம் கொண்டு போய் எளிமையாக சேர்க்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் நான் எல்லாருக்கும் ஃபிரண்டு, இப்போ மாறிப்போச்சு ட்ரண்டு என பாடலை எழுதினேன் என கூறினார்.