சமீபகாலமாக நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரிய படங்களில்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடிக்கிறார்கள்.
அந்த வகையில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதுபோது, ‘ரிச்சி’ படத்தில் நடித்து வரும் நிவின்பாலி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் 58-வது படமான ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். சில வருடங்களாக அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் நடித்து வந்தார். இந்தப் படத்தில் அவரது ஸ்டைலை மாற்ற இருக்கிறார் இயக்குனர் சிவா. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஐதராபாத்தில் தொடங்க இருக்கிறது.