அஜித் எப்போதும் இளம் தலைமுறை நடிகர்களை மிகவும் மதிப்பவர். அதனால் தான் இவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரசிகராகவே இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் படம் தீபாவளி அன்று வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது தனுஷ் நடித்து வரும் விஐபி-2 படமும் அன்றைய தினம் வெளிவரும் என கூறப்படுகின்றது. அஜித் படத்தின் ஓப்பனிங் அறிந்த தனுஷ் எப்படி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.